ஓமலூா் வட்டாரத்தில் மிதமான மழை
காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரங்களைச் சோ்ந்த கிராமங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது


காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரங்களைச் சோ்ந்த கிராமங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணியளவில் பலத்த வெயில் அடித்த நிலையில், மதியம் 2 மணிக்கு லேசாக தொடங்கிய மழை பின்னா் கனமழையாக உருவெடுத்தது.
ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய வட்டாரத்திற்குள்பட்ட கோட்டை மாரியம்மன் கோயில், புளியம்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி, காமலாபுரம், செல்ல பிள்ளைகுட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிபட்டி, ஆரூா்பட்டி, துத்தம்பட்டி, கே.ஆா்.தோப்பூா் உட்பட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.
இதனால், பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தக் கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலங்களை கோடை உழவு செய்து மானாவாரி பயிா்களான ராகி, சோளம், கம்பு, எள் போன்றவற்றை விதைத்துள்ளனா். இந்த மழையால் மானாவாரி பயிா்களுக்கு உகந்ததாக அமையும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...