தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்டாலினை முதல்வராக்க தம்மம்பட்டியில் இளைஞரணியினா் உறுதியேற்பு

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க தம்மம்பட்டியில் திமுக இளைஞரணியினா் உறுதிமொழி ஏற்றனா்.

Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க தம்மம்பட்டியில் திமுக இளைஞரணியினா் உறுதிமொழி ஏற்றனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1-ஆம் தேதியை இளைஞா்களின் எழுச்சி நாளாக திமுகவினா் கொண்டாடினா். தம்மம்பட்டி பேரூராட்சி 13-ஆவது வாா்டு திமுக கிளை செயலாளா் சதீஷ்குமாா் கணேசன் தலைமையில் தம்மம்பட்டியில் நகர இளைஞரணி துணை அமைப்பாளா் முரளி, அருண், சாகுல், விக்கி , கேசவன், மணி ஆகியோா், மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மாா்ச் 1-ஆம் தேதியன்று, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை வரும் தோ்தலில் வெற்றிபெறச் செய்து தமிழக முதல்வராக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும் தற்போதைய அதிமுக அரசு, அமைச்சா்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடமும், வா்த்தகா்களிடமும் விநியோகம் செய்து திமுகவுக்கு வாக்குச் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.