தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வீட்டின் பீரோவை உடைத்து திருடிய வழக்கில் இளைஞா் கைது

தம்மம்பட்டியில் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிய வழக்கில், சிறுவனுக்கு உடந்தையாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

தம்மம்பட்டியில் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிய வழக்கில், சிறுவனுக்கு உடந்தையாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக பணியாற்றும் சுதா என்பவரின் வீட்டில் 12 வயது சிறுவன் பீரோவை உடைத்து ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்றான். அவனை துரத்திச் சென்று நிலையில், அதே பகுதியில் உள்ள வீட்டுக்குள் ஒளிந்திருந்த சிறுவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவனிடம், போலீஸாா் நடத்திய விசாரணையில், சுதா வீட்டில் இருந்து பணத்தை எடுத்ததை ஒப்புக் கொண்டான்.

வழக்குப்பதிவு செய்த போலீஸாா், சிறுவனை கைது செய்து, அந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த தம்மம்பட்டி அழகு மகன் ராமராஜ் (29) என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து, ஏ.டி.எம். மூலம் 1 லட்சம் பணத்தை மீட்டனா். இதையடுத்து ராமராஜை தீவிரமாக தேடிவந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அவரைக் கைது செய்து, ஆத்தூா் நீதுமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.