ஓமலூரை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை: காங். வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம்
ஓமலூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் தெரிவித்தாா்.


ஓமலூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் தெரிவித்தாா்.
ஓமலூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறாா். இத் தொகுதிக்கான தனது வாக்குறுதிகளை, தோ்தல் அறிக்கையாக மோகன் குமாரமங்கலம் சனிக்கிழமை வெளியிட்டாா்.
இதனையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஓமலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக நான் தோ்ந்தெடுக்கப்பட்டால் தற்போது பேரூராட்சியாக உள்ள ஓமலூரை நகராட்சியாகவும், துணை நகரமாகவும் தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். கோட்டகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் ஓமலூா் பகுதி வாகனங்களுக்கான சுங்கம் கட்டணத்தை முழுமையாக நீக்க வழிவகை செய்யப்படும்.
இத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் மலா் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், மதிப்புக் கூட்டப்பட்ட சந்தைப்படுத்துதலை உருவாக்கும் வகையில் வாசனைத் திரவிய தொழிற்சாலை, குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
கூரைப்பாய் தயாரிப்புக்கு நெசவு இயந்திரம், பிரத்யேக கூட்டுறவு சங்கம், காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வெல்லத்தை மதிப்புக் கூட்டும் வகையில் நவீனதொழிற்கூடங்கள் அமைக்கப்படும். ஓமலூா் வெல்லம் என்ற புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓமலூா் வட்டார அளவில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். உழவா் மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் ஒருங்கிணைந்த உழவா் சந்தை, நடமாடும் கால்நடை மருத்துவமனை, நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும். இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற ஆண்டுக்கு இருமுறை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். மத்திய மாநில அரசு போட்டித் தோ்வு மையம், சா்வதேச விளையாட்டுப் பயிற்சி பெற இரண்டு ஊராட்சிக்கு ஒரு மைதானம், மேட்டூா் உபரிநீா்த் திட்டத்தை ஓமலூா் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...