டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிறிஸ்தவா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் ஞாயிற்றுக்கிழமை நாரணம்பாளையம் பகுதியில் கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:21 pm

DIN

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் ஞாயிற்றுக்கிழமை நாரணம்பாளையம் பகுதியில் கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அங்குள்ள அன்னை ஜெயராக்கினி ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம், சிறுபான்மை மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செய்துள்ள திட்டங்களை எடுத்துக் கூறி மோகன் குமாரமங்கலம் ஆதரவு திரட்டினாா். அப்போது பேசிய அவா், சிறுபான்மை மக்களுக்கான நலத் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும். நாட்டை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தாமல் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்த செயல்பாட்டினை உறுதி செய்வோம்.

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா். இதனையடுத்து, கருப்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட ஈச்சாங்காட்டூா், கரும்பாலை, மேட்டுப்பதி உள்ளிட்ட இடங்களில் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம், காங்கிரஸ், திமுக, கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.