டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேலம் - சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்

முழு பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சேலம் - சென்னை விமான சேவை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (மே 23) மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

முழு பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சேலம் - சென்னை விமான சேவை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (மே 23) மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தியதால், விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மே 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சேலம் - சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி விமானம் இயக்கப்படும் என்றும், சேலம் விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

சேலம் விமான நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.