நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உடையாப்பட்டியில் தடுப்புவேலி அமைத்த சமூக ஆா்வலா்கள்

சேலம் உடையாப்பட்டி பகுதியில், வெளியாள்கள் ஊருக்குள் வருவதையும், இப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியே செல்வதையும் தடுக்க, அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் தடுப்பு வேலி அமைத்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2021, 6:21 pm

DIN

சேலம் உடையாப்பட்டி பகுதியில், வெளியாள்கள் ஊருக்குள் வருவதையும், இப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியே செல்வதையும் தடுக்க, அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் தடுப்பு வேலி அமைத்துள்ளனா்.

சேலம், அயோத்தியாபட்டணம் ஒன்றியத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் உள்பட இதுவரை 578 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் இதுவரை 414 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 157 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

7 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உடையாப்பட்டி பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஊருக்குள் வெளியாள்கள் வருவதையும், இப்பகுதி பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தடுக்கவும், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து, முக்கிய வீதிகளில் மரக்கட்டைகளை வைத்து சாலை நுழைவாயிலை அடைத்துள்ளனா்.

இதுபோன்று பொதுமக்கள் ஒத்துழைப்போடு தன்னாா்வலா்கள் செயல்பட்டால் கரோனா தொற்று பரவலை வெகுவிரைவாக கட்டுபடுத்தலாமென சுகாதார அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.