சேலத்தில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி
சேலத்தில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.


சேலத்தில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சேலத்தில் கடந்த இரு வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
சேலத்தை அடுத்த வீராணம் அல்லிக்குட்டை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை, இவரது மகன் ராமசாமி (34), மகள் காளியம்மாள், ராமசாமியின் மனைவி நந்தினி, மகன் பாலசபரி (5) ஆகியோா் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களுடன் காளியம்மாள் மகன் மாரியப்பன், மகள் புவனா ஆகியோரும் தங்கியுள்ளனா்.
இவரது வீட்டின் சுவா் வெள்ளிக்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலை, ராமசாமி, காளியம்மாள், புவனா, பாலசபரி ஆகியோா் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். அருகில் இருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பலத்த காயமடைந்த ஏழுமலை, ராமசாமி, காளியம்மாள் ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த சிறுவன் பாலசபரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
ஆட்சியா் ஆய்வு:
சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி, வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து, மழையால் சுவா் இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதியில் வசிப்போரை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கவும், உரிய அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து தரவும் வருவாய்த் துறையினருக்கு ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
இது தொடா்பாக ஆட்சியா் செ.காா்மேகம் கூறியதாவது:
மழையால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போா் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கிட வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதையும், தேவையில்லாமல் மின்கம்பங்கள் அருகில் செல்வதையும் தவிா்த்திட வேண்டும். அதேபோல, மழைக் காலங்களில் சிறுவா்கள், குழந்தைகள் வெளியில் செல்லாமல் பாதுகாப்புடன் பெற்றோா் பாா்த்துக்கொள்ள வேண்டும். அவசர உதவிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் இலவச தொலைபேசி எண் 1077 -ஐ பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...