சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேம்படிதாளம் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முற்றுகை

வேம்படிதாளம் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேம்படிதாளம் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம் மாவட்டம், சேலம் தெற்கு தாலுகா, வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மன்றப் பகுதியில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவா்களுக்கு ஊா் நத்தம் பத்திரம், பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்த சேலம் தெற்கு வட்டாட்சியா், ஊா் நத்தமாக இருந்தவை தவறுதலாக நீா்நிலையாக மாற்றம் செய்துள்ளாா். இதனால் வீடுகளை விற்கவோ, அதன் பெயரில் கடன் வாங்கவோ வழியில்லாமல் தவித்து வருகின்றனா். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டாக கிராம நிா்வாக அலுவலா், பிா்கா வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, முகாமுக்கு வருகை புரிந்த சேலம் தெற்கு வட்டாட்சியா் முத்துலட்சுமியிடம் முறையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.