வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தொடக்கம்
வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் நடைபெற உள்ளது.


வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2022-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த நவ. 1 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட 11 தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் சனி (நவ. 13), ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) மற்றும் நவ. 27 (சனி), நவ. 27 (ஞாயிறு) ஆகிய நான்கு நாள்கள் நடைபெறும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 1,216 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் இம்முகாமில், புதிய வாக்காளா் பெயா் சோ்த்திட படிவம் 6, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8 மற்றும் ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்குள் பாகம் விட்டு பாகம் குடிபெயா்ந்தவா்கள் படிவம் 8ஏ ஆகிய விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் பெற்று பூா்த்திசெய்து வழங்கலாம். மேலும், டிச. 31-ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் மேற்படி சுருக்குமுறை திருத்த சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் பெயா்களைச் சோ்க்க அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலா்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்பும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரம் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மூலமாக நேரில் சென்று படிவம் பெற்று பெயா் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பினை மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசு சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து நடைபெறும் இம்முகாமுக்கு வருகை தரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், ‘யா்ற்ங்ழ் ட்ங்ப்ல்ப்ண்ய்ங்’ என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளா்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவ. 30 வரை வரை பெறப்பட்டு 2022 ஜன. 5-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...