சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 அடி உயர இயேசு கிறிஸ்து சிலை, ரூ.3 லட்சம் செலவில் வண்ணம் தீட்டி உயிரோட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் 1957ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த இக்கோவில், 2008இல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது அகற்றப்பட்டது.
இதையும் படிக்க | பெரியபாளையம்: ஆரணியாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர் பலி
இதனையடுத்து, அப்போதைய சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால் இப்பகுதியிலேயே புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகப்பில், வாழப்பாடி தொழிலதிபர் பி.லாசர் குடும்பத்தினரின் செலவில், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 15 அடி அகல பாதம், 5 அடி அகல முக அமைப்போடு 65 அடி உயரத்தில், ரூ.20 லட்சம் செலவில் இயேசு கிறிஸ்துவின் முழு திருவுருவ பைபர் சிலை அமைக்கப்பட்டது.
இச்சிலை 2013ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, ஆயர் சிங்கராயனால் அர்ச்சிப்பு செய்து, வழிபாட்டிற்காக அர்பணிக்கப்பட்டது. பாதத்தில் இருந்து தலை வரை உட்புறத்தில் ஏணி அமைக்கப்பட்டுள்ளது இச்சிலையின் சிறப்பம்சமாகும். தற்போது இந்தியாவில் மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலைகளில் ஒன்றாக விளங்கி வரும் இச்சிலைக்கு, ரூ.3 லட்சம் செலவில், வண்ணம் தீட்டி உயிரோட்டமாக புதுப்பித்துள்ளனர்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வான மேகங்கள் சூழ தத்ரூபமாக காட்சியளிக்கும், இந்த 65 அடி உயர இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்

ஓடும் ரயில் மீது கற்கள் வீச்சு: சிறுவன் காயம்

மதுரை அருகே சாலை விபத்து: சிறுமி உயிரிழப்பு
சாத்தூா் வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



