FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

வியத்நாம் படகு விபத்து: வேலூர் கொண்டுவரப்பட்ட இளைஞர் உடல்!

வியத்நாம் படகு விபத்தில் பலியான வினையகுமார் உடல் வேலூர் கொண்டுவரப்பட்டது.

News image

வியத்நாம் படகு விபத்து - பிடிஐ

Updated On :14 ஜூலை 2026, 3:32 pm IST

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினையகுமார் என்பவரின் உடல் இன்று சொந்த ஊரான வேலூருக்கு எடுத்து வரப்பட்டது. உறவினர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் மாநகர் சைதாப்பேட்டை, கன்னிகாபரமேஷ்வரி கோவில் தெருவை சேர்ந்த வினய்குமார் (45). இவர் லாவா நிறுவனம் சார்பில் தென்னிந்திய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட வியத்நாம் சுற்றுலாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த அவருடைய குடும்பத்தார்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர். அவருடைய உடலை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் வினையகுமாரின் உடல் இன்று காலை 7 மணி அளவில் சென்னைக்கு விமான மூலம் எடுத்துவரப்பட்டு அங்கு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான வேலூருக்கு எடுத்துவரப்பட்டது.

பின்பு அவருடைய உடல், குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. வினையகுமாருக்கு வேலூர் வட்டாட்சியர் பழனி, நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அரசு அலுவலர்களும் மக்களும் வந்து மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Summary

Vietnam boat accident Body of young man brought to Vellore!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.