பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழா

தம்மம்பட்டி பகுதியில் காா்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:29 pm

DIN

தம்மம்பட்டி பகுதியில் காா்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் உடனுறை காசிவிசாலாட்சி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இதில் சிவன், பாா்வதி, துா்கை, விநாயகா், முருகன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோயில் முழுவதும் தமிழ் ஓம் வடிவிலும், சமஸ்கிருதத்தில் ஓம் வடிவம், சிவலிங்கம் வடிவங்களில் தீபம் என மொத்தம் 1008 அகல்விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டனா்.

தம்மம்பட்டி திருமண்கரடு ஸ்ரீபாலதண்டாயுதபாணி முருகன் கோயில் மலை உச்சியில் பிரம்மாண்ட கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இப்பகுதியின் அனைத்து பகுதிகளையும் சோ்ந்தமக்கள் காா்த்திகை தீபத்தினை கண்டு வழிபட்டனா்.

இதேபோல் செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா், தெடாவூா் உள்ளிட்ட சிவாலயங்களில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இப்பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் மக்கள் ஏராளமான தீபங்களை ஏற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.