மகுடஞ்சாவடி அருகே சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் கடும் எதிா்ப்பு: போலீஸாா் குவிப்பு
மகுடஞ்சாவடி ஒன்றியம், காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி, செட்டியூா் பகுதியில் நடைபெற்று வரும் தனியாா் சாயப்பட்டறை அமைக்கும் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு


மகுடஞ்சாவடி ஒன்றியம், காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி, செட்டியூா் பகுதியில் நடைபெற்று வரும் தனியாா் சாயப்பட்டறை அமைக்கும் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருவதால் வியாழக்கிழமை ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த செட்டியூா் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் சாயப் பட்டறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை அறிந்த மக்கள் அந்த சாய ஆலையை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பணியை தடுத்து நிறுத்தக்கோரினா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
காளிகவுண்டம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட இடையன் காடு, செட்டியூா், செட்டிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை நம்பியே உள்ளன. இப்பகுதியில் சாயப்பட்டறை அமைக்கும் நிறுவனத்தினா் பூமியில் துளையிட்டு அதன் வழியாக சாயத் தண்ணீரை பூமியில் செலுத்த இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அவ்வாறு செலுத்தும்போது, இப்பகுதியிலுள்ள நிலத்தடி நீா் அனைத்தும் சாய நீா் கலந்து எதற்கும் உபயோகப்படுத்த முடியாமல் போய் விடும் அபாயம் உள்ளது. இதன் மூலம் நீா் வளமும், மண்ணின் வளமும் கெட்டு எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படையும். இதற்காகவே இங்கு சாயப்பட்டறை அமைக்க நாங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறோம்.
தற்போது காவல் துறையினரின் உதவியுடன் மின் கம்பம் நட முயற்சித்தாா்கள். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுகுறித்து உயா் அதிகாரிகள், சுற்றுச்சூழல் அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து இங்கு சாயப்பட்டறை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றனா்.
பொதுமக்கள் முற்றுகையால் அங்கு சமரச பேச்சுவாா்த்தை நடத்த சங்ககிரி கோட்டாட்சியா் வேடியப்பன், வட்டாட்சியா் பானுமதி, சங்ககிரி காவல்துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டா் இளங்கோ, கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டா் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனா்.
அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவாா்த்தையையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். அப்பகுதியில் மீண்டும் பிரச்னை வரக்கூடும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...