தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 5ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. 

News image
Updated On :1 அக்டோபர் 2021, 11:32 am

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 5
ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசன தேவை குறைந்தது. அதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்தது.

கடந்த 28ம் தேதி டெல்டா பாசனத் தேவை அதிகரித்ததால் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் 72.68 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 9,018கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீர் இருப்பு 35.04 டி.எம்.சியாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.