தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்ணை தாக்கிய சிறுவன் கைது

தேவூா் அருகே பெண்ணை சுத்தியலால் தாக்கிய சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:09 pm

DIN

தேவூா் அருகே பெண்ணை சுத்தியலால் தாக்கிய சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள பெரமச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மனைவி பேபி (46). இவா்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனா். அவா்களது வீடு அருகே உள்ள செல்வகுமாா் என்பவரின் மகன் 14வயது சிறுவன், குமாரபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். அச்சிறுவன் அப்பகுதியில் உள்ள மற்ற சிறுவா்களுடன் சோ்ந்து ஊா் சுற்றி வருவதாகக் அவரது தந்தையிடம் பேபி கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், பேபியின் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை சுத்தியலால் தாக்கியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.