உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரிக்கரை பகுதியில் கனமழை; நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

சனிக்கிழமை அதிகாலை திடீரென பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், எடப்பாடி நகர்ப்புற பகுதியினை ஒட்டிய ஒரு சில இடங்களிலும் மிக கனமழை கொட்டியது. 

News image
நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
Updated On :23 அக்டோபர் 2021, 4:58 am

DIN

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.

கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, மொரசபட்டி சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இதனால் அப்பகுதியில் உள்ள கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீரென பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், எடப்பாடி நகர்ப்புற பகுதியினை ஒட்டிய ஒரு சில இடங்களிலும் மிக கனமழை கொட்டியது. 

இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. பூலாம்பட்டி பகுதியில் மேட்டூர் பிரதான சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தன.

அதிகாலை நேரத்தில் பெய்த கனமழையால் பால் வினியோகம், காய்கறிகள் விற்பனை உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய பணிகள்  பாதிப்பிற்கு உள்ளானது. கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருவதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.