தாரமங்கலம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கட்டி வைத்துத் தாக்கிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாரமங்கலம் அருகே உள்ள புதூா் காடம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேசன் (34). இவரது தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தாய் செல்வி (56) மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
புதன்கிழமை செல்வி திடீரென மாயமானாா். இந்த நிலையில், ஆடு திருட வந்ததாகக் கூறி செல்வியை எல்லாயூா் பகுதியில் கட்டிவைத்து 4 போ் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வெங்கடேசன், தாயைத் தாக்கியவா்களிடம் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது, அக் கும்பலைச் சோ்ந்தவா்கள் வெங்கடேசனையும் தாக்கினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தாரமங்கலம் போலீஸாா் செல்வி, வெங்கடேசனைத் தாக்கிய காா்த்திக் ராஜா (29), சரவணன் (43), கண்ணன் (42), குட்டி என்கிற பாலகிருஷ்ணசாமி (51) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதி ஏர்டெல்லின் முதல் காலாண்டு லாபம் 37.3% அதிகரிப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்! விடியோ வைரல்!

மீண்டும் வாய்ப்பு! குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு முகாம்!

தஞ்சாவூர் காவல்நிலையம் முன்பு குவிந்த திமுக தொண்டர்கள்
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple


