கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பாரதி ஏர்டெல்லின் முதல் காலாண்டு லாபம் 37.3% அதிகரிப்பு!

தனது செயல்பாடுகளில் மூலம், ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் 37.3 சதவீதம் அதிகரித்து ரூ. 8,167 கோடியாக இருப்பதாக பாரதி ஏர்டெல் தெரிவித்தது.

பாரதி ஏர்டெல்

Published On :

புதுதில்லி: இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருக்கும் தனது நிறுவன செயல்பாடு மூலம், ஏற்பட்ட வலுவான வளர்ச்சியின் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் 37.3 சதவீதம் அதிகரித்து ரூ. 8,167 கோடியாக இருப்பதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 5,948 கோடியாக இருந்தது. இக்காலாண்டில் செயல்பாடுகள் மூலம் நிறுவனம் ஈட்டிய வருவாய் 18.3 சதவீதம் அதிகரித்து ரூ. 58,539 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஜூன் வரையான காலாண்டில் இது ரூ. 49,462.6 கோடியாக இருந்தது.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா செயல்பாடுகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியின் காரணமாக, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த காலாண்டு வருவாய் ரூ. 58,539 கோடியாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 18.4 சதவீதமும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.7% வளர்ச்சியாகும். அதே வேளையில், வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 12.5 சதவீதம் அதிகரித்து 60.5 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ. 250 ஆக இருந்த ஏர்டெல் தனி ஒரு நபர் பயனர் வழி சராசரி வருவாய், இக்காலாண்டில் 5.6 சதவீதம் அதிகரித்து ரூ. 264 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், ஏர்டெல் நெட்வொர்க்கில் தனி நபர் வாடிக்கையாளரின் சராசரி டேட்டா பயன்பாடு, கடந்த ஆண்டு 26.9 ஜிபி-யிலிருந்து 27.7 சதவீதம் அதிகரித்து, ஜூன் வரையான காலாண்டில் இது 34.4 ஜிபி-யாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ. 1,25,489 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகரக் கடன், இக்காலாண்டில் சுமார் 35 சதவீதம் குறைந்து ரூ. 81,852 கோடியாக உள்ளது.

Summary

Bharti Airtel reported a 37.3 per cent increase in profit after tax.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.