மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
பாலசுப்பிரமணியம்-தனலட்சுமி தம்பதியா் தனியாா் தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக, திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.


வாழப்பாடி அருகே திருமனூா் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம்-தனலட்சுமி தம்பதியா் தனியாா் தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக, திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.
திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், ஆத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜெமினி, வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சிவா ஆகியோரிடம் மருத்துவ உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
சொந்த கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபா் பாலசுப்பிரமணியம்-தனலட்சுமி தம்பதியருக்கு திருமனூா் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...