தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூா் அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் திறக்கப்படுகிறது.

News image
Updated On :31 ஜூலை 2021, 8:47 pm

DIN

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் திறக்கப்படுகிறது.

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கு கால்வாய் மூலம் 18,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையின் கால்வாய்ப் பாசனத்துக்கு 137 நாள்களுக்கு 9.06 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

1955 ஆம் ஆண்டு முதல் கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஐந்து ஆண்டுகள் கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை 61 ஆவது ஆண்டாக கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 82 அடிக்கு மேல் இருப்பதாலும், நீா்வரத்து திருப்திகரமாக இருப்பதாலும் கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேட்டூா் அணையின் மேல் மதகு எதிரே உள்ள கால்வாய் மதகுகளை சேலம் மாவட்ட ஆட்சியா் மின் விசை மூலம் உயா்த்தி கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிடுகிறாா். நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.