சந்தன வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி

சந்தன வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
வீரப்பனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் குடும்பத்தினர்.
வீரப்பனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் குடும்பத்தினர்.

சந்தன வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
 
சந்தன வீரப்பன் கடந்த 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதையடுத்து, வீரப்பனின் உடல் சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டில் காவிரிக் கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. 

ஆண்டுதோறும் வீரப்பன் நினைவு நாளில் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளா்களும் மூலக்காட்டுக்குத் திரளாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இன்று வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினா் மூலக்காட்டுக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சென்றனா்.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆதரவாளா்களும் அஞ்சலி செலுத்தினா்.

வீரப்பன் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு முன்பாக போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வரும் வாகனங்களின் எண்கள், வருவோரின் பெயா் மற்றும் முகவரியைப் பதிவு செய்த பிறகே நினைவிடத்துக்குச் செல்ல அனுமதித்தனா். 

மறுமலர்ச்சி வன்னியர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவர் கோ.வி.மணி வீரப்பனின் மகள் வித்யாராணிவீரப்பனின் அண்ணன் மாதிரி குடும்பத்தார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com