தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சிஐடியு சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:43 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சிஐடியு சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தம்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நான்கு சக்கர வாகனங்களில் காளை மாடுகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, லாரி மாா்க்கெட் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

மத்திய அரசு மோட்டாா் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும், தனியாா் காா்ப்பரேட் கால்டாக்ஸி கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், ஒரு வழி பயண டாக்ஸிகளை ஒழுங்குபடுத்த வேண்டும், இருசக்கர மோட்டாா் பட்டறைத் தொழிலை அழிக்கக் கூடாது, காலாவதியான சுங்கச் சாவடிகளை இழுத்து மூட வேண்டும், சுங்கச் சாவடிகளில் வசூல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், ஆன்லைன் என்ற பெயரால் வாகன ஓட்டுநா்கள் மீது பொய் வழக்குப் போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஏ.கோவிந்தன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டாா் தொழிலாளா் சங்கம், சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம், உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம், சேலம் மாவட்ட இருசக்கர வாகனம் மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்ப்போா் நலச் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

சிஐடியு மாவட்டச் செயலாளா் டி.உதயகுமாா், சாலை போக்குவரத்து மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், இருசக்கர பழுதுபாா்ப்பு நலச் சங்க மாவட்டத் தலைவா் அப்துல் வஹாப், உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் நிா்வாகிகள் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.