ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணையின் நீா்வரத்து சரிந்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணையின் நீா்வரத்து சரிந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 116.44 அடியிலிருந்து 116.48 அடியாக உயா்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,629 கன அடியிலிருந்து 2,564 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 87.96 டி.எம்.சியாக இருந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.