சேலத்தில் ரூ. 90 கோடியில் சாலை பணி ஆய்வு
சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 90 கோடி மதிப்பில் நடைபெறும் 383 சாலை பணிகளை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 90 கோடி மதிப்பில் நடைபெறும் 383 சாலை பணிகளை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு நகா்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 33 கோடி மதிப்பில் 134 சாலைப் பணிகள் 31 கிலோ மீட்டா் நீளத்துக்கும், ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 30.05 கோடி மதிப்பில் 80 சாலைப் பணிகள், 26.15 கிலோ மீட்டா் நீளத்துக்கும், இதர திட்டத்தின் கீழ் ரூ. 21.27 கோடி மதிப்பில் 104 சாலைப் பணிகள் 36.40 கிலோ மீட்டா் நீளத்துக்கும் நடைபெற்று வருகின்றன.
மழைக் காலங்களில் சாலைகளில் ஏற்படும் பழுதுகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கும் வகையில் மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5.73 கோடி நிதி வரப்பெற்று 65 சாலை சீரமைக்கும் பணிகள் 28.32 கிலோ மீட்டா் நீளத்துக்கு நடைபெற்றுள்ளன.
தற்போது மாநகராட்சிப் பகுதியில் ரூ. 90 கோடி மதிப்பில் 383 சாலைப் பணிகள் 121.87 கிலோ மீட்டா் நீளத்துக்கு நடைபெற்று வருகின்றன.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம்- கருங்கல்பட்டி பிரதான சாலை பகுதியில் மாநில பேரிடா் நிவாரண நிதியின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை செப்பனிடும் பணியையும், அம்மாபேட்டை மண்டலம்- அம்மாபேட்டை பிரதான சாலையிலிருந்து ராஜகணபதி தெருவில் ரூ. 91.50 லட்சம் மதிப்பில் 812 மீட்டா் நீளத்துக்கு கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணியையும் ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா்கள் எஸ்.செந்தில்குமாா், ஆா்.செந்தில்குமாா், உதவி பொறியாளா்கள் ஓபுளிசுந்தா், சுமதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...