ஜன. 26 இல் மதுக்கடைகளை மூட உத்தரவு
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசாணை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின் அறிவுறுத்தலின்படி, வரும் ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3. ஏ ஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் ஜன. 26 ஆம் தேதி மூடப்பட வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...