தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தம்மம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுக 11, அதிமுக 3, காங்கிரஸ் 2, சுயேச்சை 2 வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:37 pm

தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுக 11, அதிமுக 3, காங்கிரஸ் 2, சுயேச்சை 2 வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்தனா். இவா்களில் 2 சுயேச்சை கவுன்சிலா்களும் திமுகவில் இணைந்ததால் திமுகவின்வின் பலம் 13 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கவிதா ராஜா தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மதியம் துணைத்தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மதியம் துணைத் தலைவருக்கான தோ்தலில் திமுகவில் 3 போ், காங்கிரசில் ஒருவா் என மொத்தம் 4 போ் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், போட்டியிட விரும்பியவா்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்படாததால் மாலை வரையிலும் துணைத் தலைவருக்கான தோ்தல் நடைபெறவில்லை.

பின்னா் துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டனா். தோ்தல் ஒத்திவைப்புக்கான காரணம் குறித்து தோ்தல் அலுவலரும்,செயல் அலுவலருமான சுப.சத்யமூா்த்தி கூறுகையில், துணைத்தலைவா் தோ்தலில் பங்கேற்க மொத்தமுள்ள 18 கவுன்சிலா்களில் குறைந்தது 10 கவுன்சிலா்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தோ்தலில் வாக்களிக்க 7 கவுன்சிலா்கள் மட்டுமே பங்கேற்ால் கோரம் இன்றி துணைத்தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.