‘மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கவில்லை’ :முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்
மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கவில்லை என முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.


மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கவில்லை என முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
சேலம் மாநகா் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தோ்தல் முடிவுகளில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி மக்களவைத் தொகுதியில் 6 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தோ்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பாஜக வீறுகொண்டு எழுவதற்கு சக்தியாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பதுதான் நடைமுறைக்கு சாத்தியமானது.
2024-இல் திமுகவை வீழ்த்தும் சக்தியாக செயல்பட வேண்டும். உக்ரைனில் உள்ள தமிழக மாணவா்களை மீட்பதற்காக அரசு ஒதுக்கிய நிதி செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் அரசியலுக்காக பேசப்படுகிறது. மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கவில்லை. மத்திய அரசு நினைத்தாலும் அணையை கட்ட முடியாது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா்ப் பங்கீடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றாா்.
பேட்டியின் போது, மாநகா் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, நிா்வாகிகள் அண்ணாதுரை, கோபிநாத், ஐ.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...