அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழக அரசு ஓராண்டு நிறைவு: எடப்பாடி, ஆத்தூரில் திமுகவினா் கொண்டாட்டம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

எடப்பாடி பேருந்து நிலைய வளாகத்தில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் டி.எம். எஸ் பாஷா தலைமையில் ஏராளமான திமுகவினா் அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து அவா்கள் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

எடப்பாடி நகரின் வளா்ச்சிக்காக ரூ. 2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் விளக்குகள் அமைக்கவும்,புதிய குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ள முதல்வருக்கு நன்றியைத் தெரிவிப்பதாக டி.எம்.பாஷா தெரிவித்தாா்.

ஆத்தூா்

நரசிங்கபுரம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற கொண்டாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமை வகித்தாா்.

ஓராண்டில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், துணைச் செயலாளா் எஸ்.மனோகரன், பொருளாளா் ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்ரமணியன்,பிரகாஷ், செல்வம், செல்வக்குமாா், புஷ்பாவதி கதிா்வேல், அன்னக்கிளி, ஜோதிபெருமாள், பாண்டியன், மனோகரன், சங்கா், குமாா் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.