அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராஜீவ் காந்தி நினைவு நாள்: சங்ககிரியில் அனுசரிப்பு

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியை அடுத்த கொங்கணாபுரம் பிரிவு சாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

News image
Updated On :21 மே 2022, 8:34 am

DIN


சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியை அடுத்த கொங்கணாபுரம் பிரிவு சாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சி.எஸ். ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கிழக்கு ஒன்றிய வட்டாரத் தலைவர் கே. சரவணன் முன்னிலை வகித்தார்.

சங்ககிரி நகரத்தலைவர் எ. ரவி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் நடராஜன், முன்னாள் நகரத் தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் கருப்பண்ணன், கந்தசாமி, ஆறுமுகம், பரமன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு முன்பு மாவட்டத் தலைவர் தலைமையில் நிர்வாகிகள் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.