/

‘சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வர்ர் கோவிலில் ஆகம விதிகளை பின்பற்றுவதில்லை’

சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வர்ர் திருக்கோவிலில் ஆகம விதிகளை பின்பற்றுவதில்லை என சிவனடியார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 4:08 am

DIN

சேலம்: சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வர்ர் திருக்கோவிலில் ஆகம விதிகளை பின்பற்றுவதில்லை என சிவனடியார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சேலம் சுகவனேஸ்வர்ர் திருக்கோவில் குடமுழக்கு விழா அண்மையில் நடைபெற்றது. குடமுழக்கு விழா நடத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக பக்தர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், திருக்கோவிலில் கடைபிடிக்க வேண்டிய ஆகம முறைகளை தவிர்த்து சடங்கு பூசைகளாக நடத்தி வருவதாக சிவனடியார்கள் புகார் எழுப்பியுள்ளனர். பள்ளியறை பூஜைக்கு சாப்பிராணி தூபம் ஏற்றக் கூடாது, சங்கு நாதம், மேளம் இசைக்க கூடாது, பூசைகள் அனைத்தும் அமைதியான முறையில்தான் நடத்த வேண்டும் என நிர்வாக அலுவலர்கள் தடையிடுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் எதிர்மறை கட்டளைகளை மறுத்த சிவனடியார்கள், பள்ளியறை பூஜையின் போது மேளதாளம், சங்கு நாதம் முழங்க சிவனை சன்னதி வலம் கொண்டு சென்றனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எதிர்வரும் காலங்களில், வழிபாடு முறையில் அதிகாரிகள் தடை செய்தால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.