இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தம்மம்பட்டி மாணவர் உக்ரைனில் சிக்கித் தவிப்பு: மீட்கக் கோரி பெற்றோர் மனு

தம்மம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர், உக்ரைனில் சிக்கி தவித்து வருவதால், அவரை மீட்கக் கோரி அவரது பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

News image
ஜெய்நிவாஸ் கண்ணா (20).
Updated On :28 பிப்ரவரி 2022, 3:27 am

DIN

தம்மம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர், உக்ரைனில் சிக்கி தவித்து வருவதால், அவரை மீட்கக் கோரி அவரது பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
 
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள, மங்கப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெய்நிவாஸ் கண்ணா (20). இவர், உக்ரைனில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். 

விடுமுறையில், மங்கப்பட்டி கிராமத்திற்கு வந்தவர், கடந்த மாதம்தான் மீண்டும் உக்ரைன் சென்ற நிலையில், அங்கு சிக்கிக் கொண்டார்.

தம்மம்பட்டியில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்ட ஜெய்நிவாஸ் கண்ணன், அங்குள்ள சப் வே ஒன்றில் பதுங்கி இருப்பதாகவும், ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள் தன்னிடம் இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

மங்கப்பட்டியில் உள்ள ஜெய்நிவாஸ் கண்ணனின் பெற்றோர், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.