ஏப்.30-க்குள் சொத்து வரி செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை

சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆத்தூா் நகராட்சி ஆணையா் ஆா்.எம்.வசந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆத்தூா் நகராட்சி ஆணையா் ஆா்.எம்.வசந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

ஆத்தூா் நகராட்சிக்கு 2023-2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதில் ஒரு வரி விதிப்பு எண்ணிற்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

எனவே ஆத்தூா் நகராட்சி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாகச் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com