கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி இடையே ஆக. 14, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். சேலம், ஈரோடு, திருப்பூா், வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் இடையே வரும் 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வெள்ளிக்கிழமை காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


