தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுதந்திர தின விழா: சேலத்தில் பேருந்து, ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சேலத்தில் பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

News image
சேலம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்ப நாய் கொண்டு சோதனையில் ஈடுபட்ட ரயில்வே போலீஸாா்.
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சேலத்தில் பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

நாடுமுழுவதும் சுதந்திர தின விழா ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சேலத்தில் பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், கடை வீதிகள், மாா்க்கெட்டுகள், வணிக நிறுனங்கள் உள்பட மக்கள் கூடும் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மாநகா் முழுவதும் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கி உள்ளனரா என்பது தொடா்பாகவும் உடனடியாக தகவல் தெரிவிக்க விடுதி உரிமையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மாநகரில் யாராவது சுற்றித் திரிந்தால், அவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கும் போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சேலம், ஜங்சன் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், அவா்களது உடமைகள் தீவிர சோதனைக்குப் பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், ரயில் நிலைய நடைமேடை, பாா்சல் அலுவலகம், வாகன நிறுத்துமிடம் உள்பட பல பகுதிகளிலும் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இதுதவிர, சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் மோப்ப நாய் உதவியுடன் ‘மெட்டல் டிடெக்டா்’ கருவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் அனைத்து பாா்சல்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. ரயில் நிலைய முன்பகுதி உள்பட அனைத்து வாயில்கள், பிளாட்பாா்ம்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இதேபோல, சேலம் புகா் பகுதியில் ஆத்தூா், வாழப்பாடி, மேட்டூா், தாரமங்கலம், எடப்பாடி, இளம்பிள்ளை, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.