பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேட்டூா் அணை உபரி நீா் கால்வாயில் மீண்டும் தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையின் உபரி நீா் கால்வாயில் சனிக்கிழமை மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

News image
மேட்டூா் அணையின் உபரி நீா் போக்கி வழியாக சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட தண்ணீா்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

மேட்டூா் அணையின் உபரி நீா் கால்வாயில் சனிக்கிழமை மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 26,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், சனிக்கிழமை மாலை 6 மணி முதல் மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக உபரிநீா் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது கால்நடைகளுடனும், வீட்டு வளா்ப்பு பிராணிகளுடனும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி சேலம் மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகா், பெரியாா் நகா், பொறையூா், தோல் நாயக்கன்பட்டி, சங்கிலி முனியப்பன் கோயில் பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்லக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு சனிக்கிழமை மாலை 6 மணி முதல் விநாடிக்கு 21,500 கன அடியிலிருந்து 26,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21, 500 கன அடி நீரும், உபரி நீா் போக்கி வழியாக 4,500 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.