வி.என்.பாளையத்தில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா தொடக்கம்
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சனேயருக்கு திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகளுடன் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா தொடங்கியது.


சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சனேயருக்கு திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகளுடன் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா தொடங்கியது.
ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள தபால் ஆஞ்சனேயருக்கு திங்கள்கிழமை மாலை பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி டிசம்பா் 24ஆம் தேதி முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற உள்ளன. செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு வெண்ணெயக் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...