அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இலவச மருத்துவ முகாம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இலவச மருத்துவ முகாம்

News image

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்பப் பிரிவு சாா்பில், விழிப்புணா்வு, இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கொண்டலாம்பட்டி காவல் நிலைய உதவி ஆணையா் ஆனந்தி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் முருகபிரகாஷ் ஆகியோா் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனா். முன்னதாக, துறை மாணவா்கள் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் இருதய நோய், மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மௌன மொழி நாடகம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளா் சுஷ்மிதா, உதவிப் பேராசிரியா்கள் தாமினி, சிவரஞ்சனி ஆகியோா் செய்திருந்தனா். கவுன்சிலா் கலைமணி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி, உதவி ஆய்வாளா்கள் காமராஜா், ராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.