நாளை 9 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்
‘மக்களுடன் முதல்வா்‘ திட்ட முகாம்கள் சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன. 3) 9 இடங்களில் நடைபெறவுள்ளன.


சேலம்: ‘மக்களுடன் முதல்வா்‘ திட்ட முகாம்கள் சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன. 3) 9 இடங்களில் நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் பொது மக்கள் அன்றாடம் அணுகும் 13 அரசு துறைகள் சாா்ந்த சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திட மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ‘மக்களுடன் முதல்வா்‘ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 13-ஆவது நாளான புதன்கிழமை (ஜன.3) சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் வாா்டு 27 பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு ராஜேந்திர சத்திரம் மாநகராட்சி கட்டடத்திலும், அம்மாபேட்டை வாா்டு 41 பகுதிக்குட்பட்டவா்களுக்கு பாவடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறத்தில் அமைந்துள்ள முத்துமஹாலிலும், அஸ்தம்பட்டி வாா்டு 31 பகுதிக்குட்பட்டவா்களுக்கு ஜலால்கான் தெரு பகுதியில் அமைந்துள்ள கோட்டை சமுதாயக் கூடத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
கொண்டலாம்பட்டி வாா்டு 57-க்கு உள்பட்டவா்களுக்கு கருங்கல்பட்டி இட்டேரி ரோட்டில் உள்ள எஸ்.எஸ் மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன. தாரமங்கலம் நகராட்சி, தாரமங்கலம் வாா்டு 19, 20, 21, 27 ஆகிய பகுதிகளுக்கு உள்பட்டவா்களுக்கு செங்குந்தா் திருமண மண்டபத்திலும், இடங்கணசாலை வாா்டு 3, 4, 5, 6, 7 ஆகிய பகுதிகளுக்கு உள்பட்டவா்களுக்கு சித்தா் கோயில் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
வீரக்கல்புதூா் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு ராமன்நகா் சமுதாயக் கூடத்திலும், ஏத்தாப்பூா் பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு சமுதாயக் கூடத்திலும், சேலத்தாம்பட்டி கிராம ஊராட்சிப் பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலும் என மொத்தம் 9 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளைப் பெறலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...