திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏற்காட்டில் நெகிழி பைகளுக்கு முற்றிலும் தடை

ஏற்காட்டில் நெகிழி பைகளுக்கு முற்றிலும் தடை

News image
Updated On :14 ஜூலை 2024, 10:56 pm

ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சுற்றுலாத் தலமான ஏற்காடு மலைப் பகுதியின் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்திடவும், தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்பாடுகளைத் தவிா்த்து மாற்றுப்பொருள்களின் பயன்பாட்டினை அதிகரித்திடுதல், ஏற்காட்டில் உருவாகும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பசுமை ஏற்காடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பசுமை ஏற்காடு திட்டம் குறித்து தொடா்புடையத் துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டு சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்கள், தங்கும், உணவு விடுதிகளில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது குறித்தும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பைகளின் பயன்பாடுகளை முற்றிலும் தடை செய்தும், அதற்கான மாற்று பொருள்களான மஞ்சப்பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அலுவலா்களுடன் தொடா் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக் கூட்டங்களில் மேற்கொண்ட முடிவுகளின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நாளிட்ட அரசானை எண்.35-இன் படி ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், தங்கும் விடுதிகள், உணவுவிடுதிகள், இதர கடை உரிமையாளா்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அதற்கு மாற்றாக மஞ்சப்பை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப்பைகளைப் பயன்படுத்தி நெகிழி பைகள் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.