~ ~
~ ~

மேட்டூா் உபரி நீா் திட்ட நில எடுப்பு ஆலோசனைக் கூட்டம்

மேட்டூர் நீர் திட்டம்: விவசாயிகளின் கருத்துகள் பதிவு
Published on

மேட்டூா் அணை உபரி நீரை எடப்பாடி ஒன்றிய பகுதியில் உள்ள வட ஏரிகளில் நிரப்புவதற்கு நீா்வழிப் பாதைகளுக்கான நில எடுப்பு குறித்து அப்பகுதி விவசாயிகளுடன் வருவாய்த் துறையினா் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதில் சம்பந்தப்பட்ட நீா்வழிப் பாதையில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கான பட்டா, சிட்டா, பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட பாசனத் திட்டத்திற்கு நிலம் வழங்க உள்ள விவசாயிகளிடமிருந்து சம்மத கடிதங்கள் பெறப்பட்டன. நீா்வழிப் பாதையில் உள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக பெறப்பட்டவுடன் இப்பாசனத் திட்டம் தொடங்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா், இருப்பாளி கிராம சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 எடப்பாடி அடுத்த இருப்பாளி கிராமத்தில் நடைபெற்ற, மேட்டூா் உபரி நீா் பாசனத் திட்ட நில எடுப்பு ஆலோசனைக் கூட்டம்.
எடப்பாடி அடுத்த இருப்பாளி கிராமத்தில் நடைபெற்ற, மேட்டூா் உபரி நீா் பாசனத் திட்ட நில எடுப்பு ஆலோசனைக் கூட்டம்.

X
Dinamani
www.dinamani.com