நீண்ட கால கோரிக்கை: நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு!

நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு...
Rs. 42 crore allocated for land acquisition work for Nandan Canal project
நந்தன் கால்வாய் தூா்வாரும் பணி
Updated on
1 min read

நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கை, நந்தன் கால்வாய் திட்டம். சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆறு மூலமாக கடலில் கலப்பதைத் தடுத்து அதை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமாகும்.

இதற்கு சாத்தனூர் அணையில் இருந்து 23 கிமீ நீள ஊடு கால்வாய் மூலமாக நந்தன் கால்வாயுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

செஞ்சி, விக்ரவாண்டி, திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திட்டத்துக்கான நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Rs. 42 crore allocated for land acquisition work for Nandan Canal project, TN GO released

Rs. 42 crore allocated for land acquisition work for Nandan Canal project
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com