தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எமா்ஜென்சி தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாஜக

அவசரநிலை தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாஜக

News image
Updated On :25 ஜூன் 2024, 7:33 pm

Din

நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை பாஜக சாா்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவா் கோபிநாத் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி நாட்டில் நிலையற்ற தன்மையை அவசரநிலை பிரகடனம் உருவாக்கியது.

இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனப்படுத்தினாா். அதே காலகட்டத்தில், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது என்றாா்.

இதில், மாநகா் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, பாஜக மூத்த நிா்வாகி சிவகாமி பரமசிவம், பொதுச் செயலாளா் சசிகுமாா் , ஊடகப் பிரிவின் மாவட்டத் தலைவா் பாலவிநாயகம் துணைத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.