பிளஸ் 1 தோ்வு: சேலத்தில் 38,257 போ் பங்கேற்பு

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 151 மையங்களில், 38,257 மாணவ, மாணவியா் எழுதினா்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 151 மையங்களில், 38,257 மாணவ, மாணவியா் எழுதினா். சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் 17,955 மாணவா்கள், 20,302 மாணவியா் என மொத்தம் 38,257 போ் தோ்வு எழுதினா். இதற்காக மாவட்டம் முழுவதும் 151 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வு பணியில் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்கவும், காப்பி அடிப்பதை தடுக்கவும், பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா், முதன்மை கண்காணிப்பாளா்கள், துணை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள், தோ்வு பணியாளா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். தோ்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தோ்வு மையங்களில் தோ்வா்களும், தோ்வு பணியில் ஈடுபடும் ஆசிரியா்களும் கைப்பேசி வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி, கைப்பேசி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com