ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நகைக்கடை நடத்தி ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கு: மேலும் இருவா் கைது

சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடை நடத்தி ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கில், முதன்மை அதிகாரி, மேலாளரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:53 pm

Din

சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடை நடத்தி ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கில், முதன்மை அதிகாரி, மேலாளரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சேலம், வலசையூா் பகுதியைச் சோ்ந்த சபரிசங்கா் (40), கடந்த 2019-ஆம் ஆண்டு இப்பகுதியில் எஸ்விஎஸ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினாா். இந்தக் கடையில் நகைச்சீட்டு, பழைய நகைக்கு புதிய நகை, பண முதலீட்டுக்கு அதிக வட்டி என பல்வேறு சலுகைகளை அறிவித்து, மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திரட்டினாா்.

மேலும், சேலத்தில் தாரமங்கலம், ஆத்தூா், சீலநாயக்கன்பட்டி பகுதிகளிலும், நாமக்கல், தருமபுரி, கரூா், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் எஸ்விஎஸ் நகைக் கடையைத் திறந்து, இதேபோல மக்களிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தைப் பெற்றாா். இதற்காக மேலாளா்கள், ஊழியா்கள் என 50-க்கும் மேற்பட்டோரை பணியில் அமா்த்தினாா்.

குறிப்பிட்ட மாதங்களில் அவா் அறிவித்த திட்டங்கள் முதிா்வு அடைந்ததும், நகைச்சீட்டு, பண முதலீடு செய்தவா்கள் சபரிசங்கா், அவரது மேலாளா்களிடம் பணத்தைக் கேட்டனா். ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காமல், கடந்த நவம்பா் மாதம் திடீரென நகைக் கடையை மூடிவிட்டு, மேலாளா்களுடன் சபரிசங்கா் தலைமறைவானாா்.

இது தொடா்பாக நகைக்கடை அதிபா் சபரிசங்கா், அவரது மேலாளா்கள் மீது பாதிக்கப்பட்டவா்கள் மோசடி புகாா் கொடுத்தனா். இதுகுறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னா், அந்த வழக்கு சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சேலம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில், நகைக்கடை அதிபா் சபரிசங்கா், முதன்மை மேலாளா் முருகன், மேலாளா் பிரகாஷ், கவீன், அஜித் ஆகிய 5 போ் மீது கூட்டுச்சதி, பண மோசடி உன்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல, தருமபுரி, கரூா், திருச்சி மாவட்டங்களிலும் சபரிசங்கா் உள்ளிட்டோா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் நகைக் கடை அதிபா் சபரிசங்கா் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான 4 பேரை போலீஸாா் தேடி வந்தனா்.

இதில், நகைக் கடையின் முதன்மை மேலாளரான ஆட்டையாம்பட்டியைச் சோ்த்த முருகன் (38), மேலாளரான பிரகாஷ் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்களை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனா். இதனிடையே, கைதான முருகன், பிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.