தனி மாவட்ட வருவாய் அலுவலா் விசாரணை
ஆத்தூா் பயணியா் மாளிகையில் மாவட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி விசாரணை மேற்கொண்டாா்.


ஆத்தூா் பயணியா் மாளிகையில் மாவட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி விசாரணை மேற்கொண்டாா்.
சேலம் - உளுந்தூா் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா் நகரப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக அம்மம்பாளையம், வளையமாதேவி, துலுக்கனூா், ஆத்தூா், நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், அம்மம்பாளையம், வளையமாதேவி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் 21 பட்டாதாரா்களிடம் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி விசாரணை மேற்கொண்டாா். இதில், துணை ஆட்சியா் கதிரேசன், அன்புச்செழியன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஓம்பிரகாஷ், உதவி பொறியாளா் அறிவுடைநம்பி, நில எடுப்பு வட்டாட்சியா் வெங்கடேசன், தனிவட்டாட்சியா் மதியொளி, துணை வட்டாட்சியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...