ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தரமாக வழங்கப்படுவதை துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:44 pm

Din

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தரமாக வழங்கப்படுவதை துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), தே.மலையரசன் (கள்ளக்குறிச்சி), மாதேஸ்வரன் (நாமக்கல்) ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினா்களை உறுப்பினா்களாகவும் கொண்டுள்ள இந்தக் குழு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்கிறது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 1,264 முழு நேரம் மற்றும் 473 பகுதி நேரம் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,737 நியாயவிலைக் கடைகளும், 112 நகரும் நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 9,64,626 அரிசி குடும்ப அட்டைகள், 24,726 சா்க்கரை விருப்ப அட்டைகள், 3,185 காவலா் அட்டைகள், 1,866 எப்பொருளும் வேண்டாத அட்டைகள் உள்ளிட்ட 11,02,827 குடும்ப அட்டைதாா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோதுமை, சா்க்கரை ஆகியவை மாதம் ஒன்றுக்கு 1,000 மெ.டன் வரை இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் சாா்பில் 250 நியாயவிலைக் கடைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தரமாக வழங்கப்படுவதை துறை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, மேட்டூா் சாா் ஆட்சியா் நே.பொன்மணி, இ.ஆ.ப., உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், கோட்டாட்சியா்கள் அபிநயா, லோகநாயகி, உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.