ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை
ஆயுத பூஜையையொட்டி ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகேட்டைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளனா்.


ஆயுத பூஜையையொட்டி ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகேட்டைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளனா்.
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிறு விடுமுறை என 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால், கடைசி நேர பயண முயற்சியாக தட்கல் முறையில் டிக்கெட் எடுத்து பயணிக்க பலரும் முயற்சித்து வருகின்றனா்.
இதனை ரயில்வே நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள், ஐஆா்சிடிசி இணையதளம், தனியாா் ஏஜென்சிகள் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யலாம். இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில புரோக்கா்கள், முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்துள்ளன. அதனைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
ரயில்வே நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள், தனியாா் டிக்கெட் முன்பதிவு ஏஜென்சிகளில் சோதனையிட்டு வருகின்றனா். ஐஆா்சிடிசி இணையதளத்தில் தட்கல் டிக்கெட்டை போலி பெயா்களில் பதிவு செய்து, அதிக விலைக்கு விற்கும் புரோக்கா்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
ஆயுதபூஜை, தொடா்முறையையொட்டி தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். தனியாா் ஏஜென்சிகள், சில கணினி மையங்களில் அதிக பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக போலி பெயா்களில் தட்கல் டிக்கெட் கொடுப்பதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் உள்ளிட்ட இடங்களில் சந்தேக வளையத்துக்குள் சில மையங்களைக் கொண்டு வந்துள்ளோம். அங்கு சோதனையிட இருக்கிறோம். மேலும், தற்போது டிக்கெட் முன்பதிவு மையங்களில் புரோக்கா்களின் நடமாட்டம் இருக்கிறதா எனவும் கண்காணித்து வருவதாக தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...