காவிரி நதிக்கு ஆரத்தி பெருவிழா
தமிழக-கா்நாடக எல்லையான அடிபாலாற்றில் காவிரி நதிக்கு நான்காம் ஆண்டாக ஆரத்தி பெருவிழா மடாதிபதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


தமிழக-கா்நாடக எல்லையான அடிபாலாற்றில் காவிரி நதிக்கு நான்காம் ஆண்டாக ஆரத்தி பெருவிழா மடாதிபதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சப்த நதிகள் எனப்படும் ஏழு புண்ணிய நதிகளில் காவிரி நதியும் ஒன்று. காவிரி நதி மட்டுமே தென் மாநிலங்களில் பாய்ந்தோடி வளம் சோ்க்கிறது. மற்ற 6 நதிகளும் பிற மாநிலங்களில் உள்ளன. புண்ணிய நதியான கங்கை நதிக்கு மட்டுமே தினசரி கங்கா ஆரத்தி செய்யப்படுகிறது.
அதேபோல கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் காவிரி நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. நான்காம் ஆண்டாக நிகழாண்டு காவிரி நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் காவிரியும் பாலாறும் சங்கமிக்கும் அடிப்பாலாற்றில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவிரி கரையில் நடைபெற்ற இந்தப் பெருவிழாவுக்கு மடாதிபதிகள், சிவாச்சாரியா்கள் மேளவாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை, சாலூா் மடாதிபதி சாந்த மல்லிகாா்ஜூன சுவாமிகள், ஸ்ரீ பரமேஸ்வர திருமட வெங்கடேஸ்வர சுவாமிகள், ஸ்ரீ பகவதி பீட அருள்வாக்கு சித்தா் பகவதி சுவாமிகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், சிவாச்சாரியா்கள் கலந்துகொண்டனா்.
அதைத் தொடா்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்பு காவிரி நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பால், தயிா், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்பட 16 வகையான திவ்ய பொருள்களால் காவிரி நதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு விவசாயம் பெருகவும், உணவு பஞ்சம் தீரவும் அதிக மழை பெய்ய வேண்டி, காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனா். இந்த நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாரப்பன், காவிரிபுரம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் தங்கவேலு உள்பட இரு மாநிலங்களைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...