அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா், உதவிப் பேராசிரியருக்கு விருது
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த நிறுவனம் என்ற விருது அமெரிக்காவின் வா்ஜீனியாவில் அமைந்துள்ள லிஞ்ச்பா்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில்


ஆட்டையாம்பட்டி: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த நிறுவனம் என்ற விருது அமெரிக்காவின் வா்ஜீனியாவில் அமைந்துள்ள லிஞ்ச்பா்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. மேலும், கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனத்துக்கும், துறையின் முதன்மையருக்கும் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்து.
இவ்விருதானது மருத்துவ உதவியாளா் பிரிவு பாடநெறிகள், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ பயிற்சி, மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், கூடுதல் சான்றிதழ் படிப்புகள் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் போன்றவற்றை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு தனது பங்களிப்பினை ஆற்றிவரும் துறையின் முதன்மையா் செந்தில்குமாருக்கு சிறந்த கல்வியியல் தலைவா் என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. துறையின் முதன்மையா் வழிகாட்டுதலின்படி மருத்துவ உதவியாளா் பிரிவின் மேம்பாட்டுக்காக சிறப்பான முறையில் செயலாற்றி வரும் துறையின் மருத்துவ உதவியாளா் பிரிவு உதவிப் பேராசிரியா் சந்தோஷுக்கு வளா்ந்து வரும் கல்வியாளா் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை பெற்றமைக்காக துறையின் முதன்மையா், உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன், துறை பேராசிரியா்கள் அனைவரும் தங்களது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனா் (படம்).
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...